கோப்பையை இழந்த சோகத்தில் இந்திய அணி... மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுத ஷஃபாலி வெர்மா..!

கண்ணீர் விட்டு அழுத ஷஃபாலி வெர்மா

 • Share this:
  ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சோகத்தில் இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார்.

  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர்கள் ஹீலி மற்றும் மூனி அதிரடியாக அபாரமாக விளையாடி முறையே 75, 78 குவித்தனர்.

  இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 5வது முறையாக  கோப்பையை வென்றது.  இந்த தொடரில் தோல்வியே காணாத இந்திய அணி இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா இந்த போட்டியில் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வியின் சோகம் தாங்க முடியாமல் ஷஃபாலி வெர்மா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகவீராங்கனைகள் தேற்றி ஆறுதல் கூறினார்.  இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஹீலி ஆட்டநாயகன் விருதை தட்டிசென்றார். தொடரின் சிறந்த வீராங்கனையாக மூனி தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

   

  Also Read : பாய்ஸ் கட் ஹேர்ஸ்டைல், கம்பீர தோற்றம், இறங்கி அடிக்கும் தோனி...! யார் இந்த ஷஃபாலி வெர்மா..?

   
  Published by:Vijay R
  First published: