இலங்கையை ஊதிதள்ளிய இந்திய அணி... 4 லீக் போட்டிகளிலும் வெற்றிப்பெற்று முதலிடம்

ICC Womens T20 Worldcup

ICC Womens T20 WorldCup | IndvsSL | 'ஏ' பிரிவில் இடம்பெற்றுளள்  இந்திய அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடம் பிடித்து முடித்துள்ளது.

 • Share this:
  உலகக்கோப்பை பெண்கள் டி20 தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் 14வது லீக் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது.

  இலங்கை அணியின் கேப்டன் அட்டப்பட்டு 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.இந்திய அணி சார்பில் ராதா யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷிபாலி வெர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர்.

  குறிப்பாக ஷிபாலி வர்மா 34 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 47 ரன்கள் அடித்தார். 114 என்ற இலக்கை இந்திய அணி 14-வது ஓவரிலேயே  எளிதாக எட்டி வெற்றி பெற்றது. நடப்பு உலக்கோப்பை தொடரில் இந்திய அணி  4லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது.  இதன்மூலம் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுளள்  இந்திய அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடம் பிடித்து முடித்துள்ளது. நான்கு ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியஇந்திய வீராங்கனை ராதிகா ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  Published by:Vijay R
  First published: