மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாதனை படைக்குமா இந்தியா..? ஆஸ்திரேலியாவுடன் நாளை பலப்பரீட்சை

ICC Womens T20 Worldcup

ICC Womens T20 WorldCup | AustraliaW vs IndiaW | பேட்டிங்கில் முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தாலும், பந்துவீச்சே மிகப்பெரிய பலமாக உள்ளது.

 • Share this:
  மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில், வெற்றிபெற்று இந்தியா வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  மெல்பர்னில் மைதானத்தில் ஞாயிறு பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது.

  இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷபாலி வர்மா அணியின் நம்பிக்கையாக திகழ்கிறார். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்ப்ரீத் , ஜெமிமா போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தாலும், பந்துவீச்சே மிகப்பெரிய பலமாக உள்ளது. குறிப்பாக, பூனம் யாதவ், ராதா, ராஜேஸ்வரி, தீப்தி சர்மா உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா முத்திரை பதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேவேளையில், டி-20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 6-வது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

  இதுவே, அந்த அணியின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இருந்த போதும், நடப்புத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆஸ்ரேலியாவை வீழ்த்தியுள்ளதால் இந்திய வீராங்கனைகள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: