Home /News /sports /

ICC Womens T20 World Cup | பூனம் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா... இந்திய அணி அபார வெற்றி..!

ICC Womens T20 World Cup | பூனம் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா... இந்திய அணி அபார வெற்றி..!

ICC Womens t20 world cup

ICC Womens t20 world cup

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூனம் யாதவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஐசிசி உலகக் கோப்பை தொடர ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. குரூப் ஏ  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினார். சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்திய வீராங்கனைகள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

மந்தனா 10, வர்மா 29, கேப்டன் கவுர் 2 ரன்னிலும் அவுட்டாகினர். இந்திய அணி 47 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. 4வது விக்கெட் ஜோடி சேர்ந்த சர்மா - ரோட்ரிக்ஸ் சற்று நிதானமாக விளையாடினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. சர்மா அதிகபட்சமாக 49 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை மோனி 6, கேப்டன் லானிங் 5, ஹேய்னஸ் 6 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனை ஹீலி அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடதால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாச்தில் வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்கி உள்ளது.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, ICC Women’s World T20

அடுத்த செய்தி