மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸி. உடன் மோதல் - வரலாறு படைக்குமா இந்தியா..?

 • Share this:
  மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் இறுதியாட்டத்தில் இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  ஏழாவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்பர்னில் மார்ச் 8-ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இதில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுடன், 4-து இடத்தில் உள்ள இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

  இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷபாலி வர்மா மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஷபாலி, 161 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்தவர்களின் 4-வது இடம் வகிக்கிறார்.ஆனால், அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீராங்கனைகளில் வேறு எந்தவொரு இந்திய வீராங்கனையும் இல்லை.

  பேட்டிங்கில் முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தாலும், பந்துவீச்சே இந்திய அணியின் பலமாக உள்ளது. குறிப்பாக, சுழற்பந்துவீச்சில் பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர்.

  இதனால், இறுதியாட்டத்தில் இந்திய சுழல் தாக்குதலை சமாளிப்பது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பேட்டிங்கில் முன்னணி வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூா்த்தி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

  இதனால், லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய 3 போட்டிகளிலும் இந்தியா 150 ரன்களை கடக்கவில்லை. எனவே, இறுதியாட்டத்தில் இவர்கள் ஜொலித்தால் தான் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.

  டி-20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 7-வது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவே, அந்த அணியின் பலத்தை பறைசாற்றுவதால் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு கடும் சாவால் காத்திருக்கிறது.

  இருபது ஒவர் கிரிக்கெட் தொடரை பொறுத்தரை இவ்விரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 6 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலியா 13 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

  இருப்பினும், நடப்புத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆஸ்ரேலியாவை வீழ்த்தியுள்ளதால் இந்திய வீராங்கனைகள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர்.

  எனவே, முதல் முறையாக மகுடம் சூடி இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:
  Published by:Rizwan
  First published: