இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
2022 மகளிர் உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 17-வது ரன்னை கடந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களை அடித்த மகளிர் கிரிக்கெட் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். அவர் 51 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார்.
ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் 2717 ரன்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 326 ரன்களும் டி20 போட்டியில் 1971 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்தியாவுக்காக இந்த சாதனையை படைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த ஸ்மிருதி மந்தனா வங்கதேசத்துக்கு எதிராக செவ்வாய்கிழமை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 2013 முதல் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மந்தனா இன்று இந்தியாவின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
தனது 7 வருட வாழ்க்கையில், மந்தனா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது 7 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களை விளாசியுள்ளார்.
மந்தனா தனது சிறப்பான பேட்டிங் செயல்பாட்டிற்காக 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரருக்கான Rachael Hayhoe - Flint விருதை வென்றுள்ளார். பல நிபுணர்கள் அவரை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதினர். அவரது சிறந்த ஆண்டுகள் வரவிருக்கும் நிலையில், மந்தனா வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது, 2022 உலகக்கோப்பையில், மந்தனா 6 போட்டிகளில் 256 ரன்களை எடுத்துள்ளார். அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 123 ரன்களும் பாகிஸ்தானுக்கு எதிராக 52 ரன்களும் எடுத்தார். ஆனால், மீதமுள்ள 4 போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தைப் பெற்று பெரிய ரன்களை எடுக்கத் தவறிவிட்டார்.
இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதியில் நுழைந்து விட்டால் ஸ்மிரிதி மந்தனாவின் மட்டை பேசும் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC world cup, Smriti Mandhana