2023 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 நாட்கள் கொண்ட போட்டியாக நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.
டி20 கிரிக்கெட் வருகைக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்தி வருகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளை பகலிரவு போட்டியாகவும் நடத்தி வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் 2023 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு 90 ஓவர்களுக்கு பதிலாக 98 ஓவர்கள் வீச வேண்டும். இதனால் 58 ஓவர்கள் வரை மட்டுமே குறையும் என்று கணக்கிட்டுள்ளனர்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 நாட்களாக குறைப்பதன் மூலம் 335 நாட்கள் கிடைக்கும். இதில் பல்வேறு தொடர்களை நடத்தி கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குமுன் தென்னாப்ரிக்கா-ஜிம்பாப்வே (2017), இங்கிலாந்து-அயர்லாந்து (2019) அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்டதாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.