Home /News /sports /

டாப்-10லிருந்து விரைவில் வெளியேறும் ‘கிங்’ கோலி- ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு

டாப்-10லிருந்து விரைவில் வெளியேறும் ‘கிங்’ கோலி- ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு

விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கேப்டன் விராட் கோலி 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் 915 புள்ளிகளுடன் நம்பர் 1 ஆக திகழ்கிறார். 900 புள்ளிகளுடன் ஜோ ரூட் 2ம் இடத்திலும் 879 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் 3ம் இடத்திலும், 877 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் 4ம் இடத்திலும் 789 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 5ம் இடத்தில் இருக்கிறார்.

    6ம் இடத்தில் டேவிட் வார்னர் 780 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், இலங்கையின் திமுத் கருணரத்ன 754 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும் 750 புள்ளிகளுடன் பாபர் ஆசம் 8ம் இடத்திலும் 747 புள்ளிகளுடன் விராட் கோலி 9ம் இடத்திலும் 731 புள்ளிகளுடன் ட்ராவிஸ் ஹெட் 10ம் இடத்திலும் உள்ளனர்.

    பவுல்ங் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க 873 புள்ளிகளுடன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2ம் இடத்தில் நீடிக்கிறார். 3ம் இடத்தில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரீடி, 4ம் இடத்தில் டிம் சவுதி, 5ம் இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளனர்.

    இதையும் படிங்க: Novak Djokovic| ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற நம்பர் 1-க்கே அனுமதி இல்லை- ஜோகோவிச் விசா ரத்து

    ரபாடா, ஹேசில்வுட், வாக்னர், பும்ரா, ஸ்டார்க் ஆகியோர் முறையே 6,7,8,9, 10ம் இடங்களில் உள்ளனர். விராட் கோலி சதமெடுத்து 2 ஆண்டுகள் முடிந்து 3ம் ஆண்டு தொடங்கிவிட்டது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC Ranking, Kl rahul, R Ashwin, Virat Kohli

    அடுத்த செய்தி