சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 919 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து 238 ரன்கள் குவித்ததையடுத்து, வில்லியம்ஸன் வலுவான நிலையை அடைந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதம் அடித்ததன் மூலம், 30 புள்ளிகள் பெற்று 900 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்குப் பின், தனது மனைவி பிரசவத்துக்காக இந்தியா திரும்பிய விராட் கோலி 870 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
ஆஸி. வீரர் லபுஷேன் தற்போது 866 புள்ளிகளுடன் கோலியை நெருங்கி வருவதால், பிரிஸ்பன் போட்டியில் அரை சதம் அடித்தாலே அவர் கோலியை 4-வது இடத்துக்கு லபுஷேன் தள்ளிவிடுவார்.
அதேசமயம், சிட்னி டெஸ்ட்டில் இரு அரை சதங்கள் அடித்த புஜாரா, 2 இடங்கள் முன்னேறி 753 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
6-வது இடத்தில் இருந்த கேப்டன் ரஹானே சிட்னி டெஸ்ட்டில் சரியாக விளையாடாததை அடுத்து, இரு இடங்கள் குறைந்து, 756 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
ரிஷப் பந்த் 19 இடங்கள் முன்னேறி 26ம் இடம் பிடித்துள்ளார்.
ஹனுமா விஹாரி 52-வது இடத்திலும், அஸ்வின் 89-வது இடத்திலும், ஷுப்மான் கில் 69-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் அஸ்வின் 2- இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்குச் சென்றுள்ளார். பும்ரா 9-வது இடத்திலிருந்து சரிந்து 10-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 428 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸி. வீரர் கம்மின்ஸ் முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் நீல் வேக்னர் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC Ranking, Rishabh pant, Steve Smith, Virat Kohli