ஐசிசி சமீப டெஸ்ட் தரவரிசை பேட்டிங் பட்டியலில் தடுமாறி வரும் விராட் கோலியை சத நாயகன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ருட் முந்தினார்.
கோலியின் 4ம் இடத்தில் இப்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். ஜஸ்பிரித் பும்ரா டாப் 10 இடத்தில் பவுலிங் தரவரிசையில் வந்துள்ளார். டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷாகிப் அல் ஹசன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் 901 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும் 891 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் 2ம் இடத்திலும் 878 புள்ளிகளுடன் மார்னஸ் லபுஷேன் 3ம் இடத்திலும் 846 புள்ளிகளுடன் ஜோ ரூட் 4ம் இடத்திலும் 791 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் கோலி 5ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான நாட்டிங்காம் முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 64 மற்றும் 109 என்று அசத்தி 49 புள்ளிகளைப் பெற்றார், மாறாக விராட் கோலி கோல்டன் டக் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் இறங்கவேயில்லை, ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பவுலிங் தரவரிசையில் நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா 9ம் இடத்திற்கு முன்னேறினார். மார்ச்சுக்குப் பிறகு பும்ரா டாப் 10-ல் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 7ம் இடம் பிடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐசிசி பவுலிங் தரவரிசையில் 908 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் முதலிடம் வகிக்க 856 புள்ளிகளுடன் இந்தியாவின் அஸ்வின் 2ம் இடத்திலுள்ளார். ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள அஸ்வினைத்தான் கோலி அணியிலிருந்து நீக்குகிறார். 3ம் இடத்தில் டிம் சவுதியும், 4ம் இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டும் 5ம் இடத்தில் நீல் வாக்னரும் 6ம் இடத்தில் ரபாடாவும் 7ம் இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் 8ம் இடத்தில் பிராடும், 9ம் இடத்தில் பும்ராவும் 10ம் இடத்தில் மிட்செல் ஸ்டார்க்கும் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC Ranking, Jasprit bumrah, Joe Root, Virat Kohli