Test Ranking: ரிஷப் பண்ட் அசுர வளர்ச்சி, புஜாராவுக்கு 3-வது இடம்!

highest #ranking for Indian wicket keeper: #RishabhPant beats #Dhoni | டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதிகப்புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

Web Desk | news18
Updated: January 8, 2019, 7:38 PM IST
Test Ranking: ரிஷப் பண்ட் அசுர வளர்ச்சி, புஜாராவுக்கு 3-வது இடம்!
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2-வது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட். (BCCI)
Web Desk | news18
Updated: January 8, 2019, 7:38 PM IST
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தோனியைப் பின்னுக்குதள்ளி ரிஷப் பண்ட் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சிறந்த டெஸ்ட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 17-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Rishabh Pant
ஆஸ்திரேலிய பந்துவீச்சை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷப் பண்ட். (Images: BCCI)


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 350 ரன்கள் குவித்ததன் மூலம், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அசுர வளர்ச்சி அடந்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

ரிஷப் பண்ட், Rishabh Pant
சதமடித்த மகிழ்ச்சியில் பேட்டை சுழற்றிய ரிஷப் பண்ட். (AP)


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி 662 புள்ளிகளே பெற்றுள்ளார். இவரின் சிறந்த தரவரிசை 17 தான். முன்னாள் விக்கெட் கீப்பர் ஃபரோக் இன்ஜினியரின் சிறந்த தரவரிசை 19 தான். இவர்கள் இருவரின் சாதனையையும் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

Pujara, புஜாரா
மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய புஜாரா. (BCCI)
Loading...
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 922 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், 897 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) தொடர்ந்து 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 881 புள்ளிகளுடன் புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 4-வது இடத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

அணிகள் தரவரிசையில், இந்தியா (116), இங்கிலாந்து (108), நியூசிலாந்து (106) ஆகிய மூன்று இடங்களில் உள்ளன.

ஒருநாள் அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கம் ஏன்? காரணம் வெளியானது..

Also Watch...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...