ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் மிக உயர்ந்த தரவரிசை ஆல்-ரவுண்டராக தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார், சமீபத்திய ஐசிசி அறிவிப்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) டெஸ்ட் தரவரிசையில். ஜடேஜா 385 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மற்றொரு இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 341 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் 336 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (313) நான்காவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 298 புள்ளிகளுடன் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளார்.
அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ளார், 850 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், சக வீரர் ஜஸ்பிரித் பும்ரா 830 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் 901 புள்ளிகளுடன் தனது முதலிடத்தைத் தொடர்கிறார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 754 புள்ளிகளுடன் 8-வது இடத்தைப் பிடித்தார். முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் 892 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 845 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 844 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
விக்கெட் கீப்பர்-பேட்டர் லிட்டன்தாஸ் பங்களாதேஷின் ஒரே இன்னிங்ஸில் 88 ரன்களை எடுத்து 3 இடங்கள் முன்னேறி 17 வது இடத்திற்கு வந்துள்ளார், அதே நேரத்தில் இலங்கை வீரரும் ஆட்ட நாயகனுமான அஞ்சேலோ மேத்யூஸ் முதல் இன்னிங்ஸில் 199 ரன்களை விளாசினார், இதனையடுத்து டெஸ்ட் தரவரிசையில் 21ம் இடம் பிடித்துள்ளார்.
முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் சதம் அடித்தன் மூலம் தங்கள் நிலையையும் தரவரிசையில் உயர்த்திக் கொண்டுள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு இடம் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் நயீம் ஹசனின் முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தார் இதனால் ஒன்பது இடங்கள் முன்னேறி 53வது இடம் பிடித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC Test Ranking, Ravindra jadeja