முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி தரவரிசை:டாப்-10-லிருந்து வெளியேறிய கோலி; ஜோ ரூட் நம்பர் 1, புது ஹீரோ ரிஷப் பண்ட்

ஐசிசி தரவரிசை:டாப்-10-லிருந்து வெளியேறிய கோலி; ஜோ ரூட் நம்பர் 1, புது ஹீரோ ரிஷப் பண்ட்

virat kohli

virat kohli

நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட்டுக்குப் பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் பிரிவில் விராட் கோலி 6 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த டாப்-10 இடத்தை இழந்தார். ஜோ ரூட் புதிய நம்பர் 1, புதிய அதிரடி ஹீரோ ஜானி பேர்ஸ்டோ 10ம் இடத்தையும் இந்தியாவின் ரிஷப் பண்ட் 5ம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட்டுக்குப் பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் பிரிவில் விராட் கோலி 6 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த டாப்-10 இடத்தை இழந்தார். ஜோ ரூட் புதிய நம்பர் 1, புதிய அதிரடி ஹீரோ ஜானி பேர்ஸ்டோ 10ம் இடத்தையும் இந்தியாவின் ரிஷப் பண்ட் 5ம் இடத்தையும் பிடித்தனர்.

இங்கிலாந்தின் புதிய அணுகுமுறையில் 377 ரன்கள் இலக்கை அபாரமாக 75 ஓவர்களில் விரட்டி 5வது டெஸ்ட் போட்டியை ஆதிக்கம் செலுத்தி வென்றது. இதனையடுத்து ஜோ ரூட் பெரிய முன்னேற்றம் அடைந்து நம்பர் 1 ஆகவும், இந்தியாவுக்கு எதிராக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் கண்ட பேர்ஸ்டோவும் பெரிய அளவில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டனர்.

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடம் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் ,இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ரோகித் சர்மா 9-வது இடத்தில் உள்ளார். 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக விராட் கோலி டாப் 10 இடத்தை இழந்துள்ளார்.சமீப கால மோசமான பேட்டிங் காரணமாக அவர் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர்ககளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஜடேஜா முதல் இடம் பிடித்துள்ளார்.2வது இடத்தில் வங்காளதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் ,3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் உள்ளனர்.

விராட் கோலி 714 புள்ளிகளுடன் 13ம் இடத்துக்கு பின்னடைவு கண்டார்.

First published:

Tags: ICC Test Ranking, India Vs England, Joe Root, Rishabh pant, Virat Kohli