டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்!

ICC Test Rankings India Continued In First Place | டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்!
இந்திய டெஸ்ட் அணி (File)
  • News18
  • Last Updated: November 20, 2018, 3:52 PM IST
  • Share this:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

வாரந்தோறும் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த வாரத்திற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா தொடர்ந்து முதலிடம்!


எந்த அணியும் எளிதில் தொட்டுவிடாத வகையில், இந்தியா அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 106 புள்ளிகளைப் பெற்றுள்ள தென் ஆஃப்ரிக்கா அணி 2-வது இடத்தில் உள்ளது. ஒரு புள்ளிகள் பின் தங்கிய நிலையில், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3-வது இடத்தில் உள்ளது.

BCCI, இந்திய டெஸ்ட் அணி
வெற்றிக் களிப்பில் இந்திய டெஸ்ட் அணி (BCCI)


தற்போது, இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் 211 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட்டில் 57 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 3-வது போட்டியிலும் வெற்றி பெற்றால், தென் ஆஃப்ரிக்கா அணியை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் 2-வது இடத்தை பிடிக்கலாம்.Test Rankingடெஸ்ட் அணிகள் தரவரிசை (ICC)கேப்டன் விராட் கோலி முதலிடம்!

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை, முதல் 9 இடங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹ்மான், 13 இடங்கள் முன்னேறி 18-வது இடத்திற்கு வந்துள்ளார். இதுவே, அவரின் சிறந்த தரவரிசையாக இருக்கிறது.Test Batsman Rankingடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் (ICC)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 935 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 910 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திலும், 875 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

Also See...

First published: November 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்