டெஸ்ட் தரவரிசை பரிதாபங்கள்: 5-வது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து!

#ICCTestRankings: England slip to fifth place | சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசை பரிதாபங்கள்: 5-வது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து!
சோகத்தில் இங்கிலாந்து அணி. (EnglandCricket)
  • News18
  • Last Updated: February 13, 2019, 8:43 PM IST
  • Share this:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-2 என இங்கிலாந்து அணி இழந்தது. கடைசி டெஸ்டில் மட்டும் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது.

England Team, இங்கிலாந்து அணி
கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி. (EnglandCricket)இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால், இங்கிலாந்து அணி 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அந்த அணி 140 புள்ளிகளுடன் நியூசிலாந்து (107) மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு (104) அடுத்த இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகள் கூடுதலாக பெற்றதால் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7 புள்ளிகள் கூடுதலாக பெற்று 77 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள். (Image: AP)
முதல் இடத்தில் இந்திய அணியும் (116), இரண்டாவது இடத்தில் தென்னாப்ரிக்க அணியும் (110) தொடர்ந்து நீடிக்கின்றன.

தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு!!!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்