மும்பை டெஸ்ட் போட்டியில் வெளுத்து வாங்கிய மயங்க் அகர்வால் தன் 150 மற்றும் 2வது இன்னிங்ஸ் அரைசதம் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பெரிய பாய்ச்சல் மேற்கொண்டுள்ளார். அஸ்வின் ஆல்ரவுண்டராக 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
10 விக்கெட் சாதனை மன்னன் அஜாஸ் படேலும் பெரிய முன்னேற்றம் கண்டார். மும்பை டெஸ்ட்டில் 150 மற்றும் 62 ரன்கள் எடுத்து வெற்றியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற மயங்க் அகர்வால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 30 இடங்கள் பாய்ச்சல் மேற்கொண்டு 11ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். நவம்பர் 2019-ல் அவர் அதிகபட்சமாக 10ம் இடத்தில் இருந்தார்.
மும்பையில் பிறந்து உலக சாதனை படைத்த அஜாஸ் படேல் 23 இடங்கள் முன்னேறி பவுலர்கள் தரவரிசையில் 38ம் இடத்துக்கு வந்துள்ளார். மும்பை டெஸ்ட்டுக்கு பிறகு ஷுப்மன் கில் 45ம் இடத்துக்கும் முகமது சிராஜ் 41ம் இடத்துக்கும் நியூசிலாந்து பேட்டர் டேரில் மிட்செல் 78ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பவுலிங் தரவரிசையில் பிரமாதமாக வீசி வரும் அஸ்வின் 43 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று 883 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர் பட்டியலிலும் 2ம் இடத்தில் அஸ்வின் உள்ளார். ஜடேஜா 4ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஜேசன் ஹோல்டர் இதில் முதலிடம்.
பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடம் ஸ்டீவ் ஸ்மித் 2ம் இடம் கேன் வில்லியம்சன் 3ம் இடம், மார்னஸ் லபுஷேன், ரோகித் சர்மா ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்லனர். விராட் கோலி 6ம் இடத்துக்குச் சரிந்தார். டேவிட் வார்னர் 9ம் இடத்திலும் டி காக் 10 ம் இடத்திலும் உள்ளனர்.
Also Read: Rory Burns| ரோரி பர்ன்ஸ் பவுல்டு ஆன ஸ்டார்க் பந்து சாதாரண பந்துதான்
அணிகளில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் டாப் 5-ல் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC Ranking, India vs New Zealand, R Ashwin