ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ள விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 923 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் கேன் வில்லியம்சன், 4வது இடத்தில் புஜாராவும் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் அவர் பின்னடைவை சந்தித்து உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் ராபடா 2வது இடத்திலும் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா 794 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.
2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான கோலி, 2009-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள் தரவரிசையில் 48 வது இடத்தில் இருந்தார்.
சரியாக 10 ஆண்டுகள் முடிந்து 2019-ம் ஆண்டு முடிவடையும் போது அவர் டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இதனை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.