இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் பட்டத்தையும் தட்டி சென்றார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 3-ம் இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது 406 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய வீரர் ஜேசன் ஹோல்டர் 2-வது இடத்திலும் ரவிசந்திரன் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளார்.
Also Read : அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் நிலை என்ன?- வருவாரா மாட்டாரா?
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே முதலிடத்திலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திலும் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மனிஸ் முதலிடத்திலும் ரவிசந்திரன் அஸ்வின் இராண்டவது இடத்திலும் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 10-வது இடத்தில் உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.