முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா முதலிடம்… 2ஆவது இடத்தில் அஷ்வின்

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா முதலிடம்… 2ஆவது இடத்தில் அஷ்வின்

ரவிந்திர ஜடேஜா

ரவிந்திர ஜடேஜா

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையைப் போன்று, பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசை பட்டியலிலும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களுக்கான தர வரிசையில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதன் அடிப்படையில் தர வரிசை பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் 7விக்கெட்டுகளை கைப்பற்றிய நாதன் லியோன் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 15 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான 40 வயதாகும் ஆண்டர்சன், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் அடிப்படையில் அவர் முதலிடத்திற்கு சென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆவது முறையாக ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையைப் போன்று, பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசை பட்டியலிலும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ள நிலையில், அஷ்வின் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது.

First published:

Tags: Cricket