Home » News » Sports » CRICKET ICC TEST CHAMPIONSHIP TABLE INDIA IN 2ND PLACE AUSSIES CONTINUES TO BE NUMBER 1 MUT

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸி.யை விட அதிகப் புள்ளிகள் பெற்றும் நியூஸி.க்கு 3வது இடம் ஏன்?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸி.யை விட அதிகப் புள்ளிகள் பெற்றும் நியூஸி.க்கு 3வது இடம் ஏன்?
பாகிஸ்தானுக்கு எதிராக வென்ற நியூஸிலாந்து அணி.
  • News18 Tamil
  • Last Updated: December 31, 2020, 10:19 AM IST
  • Share this:
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் நீடிக்கின்றன. ஆஸ்திரேலிய அணியைவிட அதிகமான புள்ளிகள் பெற்றும் நியூஸிலாந்து அணி 3-வது இடத்திலேயே நீடிக்கிறது.

பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் 30 புள்ளிகள் பெற்று இந்திய அணி 2-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணி தற்போது 390 புள்ளிகளுடன், 72.2 சதவீத வெற்றிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய அணிதோல்வி அடைந்தாலும், புள்ளிகள் பட்டியலி்ல 322 புள்ளிகளுடன் இருந்தாலும், வெற்றி சதவீதத்தில் 76.6 சதவீதத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்ற போதிலும் 3-வது இடத்திலேயே நீடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூஸிலாந்து வென்றதன் மூலம் 60 புள்ளிகள் பெற்றது, ஆனால், வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் 66.7சதவீதத்துடன் இருப்பதால், 3-வது இடத்தையேப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணி 292 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கின்றன.
First published: December 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories