IND vs NZ டெஸ்ட் - வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச் அமைந்தால் இந்தியா அம்போ- மான்ட்டி பனேசர் ஆரூடம்

மான்ட்டி பனேசர்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவினால் இந்தியா தடுமாறும் என இங்கிலாந்து முன்னாள் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான மான்ட்டி பனேசர் ஆரூடம் கூறியுள்ளார்.

  • Share this:
    ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சு இப்போது சாதகமான ஆட்டக்களங்களில் எதிரணியினருக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை. பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்பது உண்மைதான், அதற்காக இந்தியா சோர்ந்து போய் விடாது. மீண்டும் எதிரணியினருக்கு தங்கள் பந்து வீச்சு மூலம் தக்க பதிலடி கொடுத்து வருவதைத்தான் நாம் சமீபமாகப்பார்த்து வருகிறோம்.

    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது.

    இவ்விரு போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்ட்டி பனேசர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தற்போது இங்கிலாந்தில் நிறைய இடங்களில் கணிசமாக மழை பெய்கிறது. இதே போன்ற குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை தொடர்ந்து நீடித்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே நீயா-நானா? என்ற மோதலை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். வேகப்பந்து ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை விட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.

    எனவே டெஸ்ட் போட்டியின் போது சில தருணங்களில் பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகி வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் போது, இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க சூப்பராக இருக்கும்.

    அதே சமயம் நன்கு வெயில் அடித்து ஆடுகளம் காய்ந்து இருந்தால் அத்தகைய சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக இந்தியா 2 சுழற்பந்து வீச்சாளர், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். எனவே வானம் மேகமூட்டம் இன்றி தெளிவாக காணப்பட்டால், அது இந்தியாவுக்கு அனுகூலமாக மாறி விடும். எல்லாமே வானிலையைச் சார்ந்தே இருக்கிறது.

    இதற்கு முன்பாக நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி அசத்தினால், அதே உத்வேகத்துடன் நல்ல நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை சந்திக்கும். ஆனால் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தினால், அதன் பிறகு அவர்களின் நம்பிக்கை குறைந்து விடும். அவ்வாறு நடப்பது இந்தியாவுக்கு நல்லதாகும்.

    இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. அந்த சமயத்தில் வெயில் கொளுத்தும். ஆடுகளங்கள் வறண்டு போய் இருக்கும். அதனால் இந்த முறை டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்பதே எனது கணிப்பாகும்.

    இவ்வாறு பனேசர் கூறினார்.

     
    Published by:Muthukumar
    First published: