ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னது! டி20 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா,கோலி, உம்ரன் மாலிக் இல்லையா?

என்னது! டி20 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா,கோலி, உம்ரன் மாலிக் இல்லையா?

விராத் கோலி- ரோகித் சர்மா

விராத் கோலி- ரோகித் சர்மா

உண்மையில் பார்மில் இல்லாத ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு டி20 உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்தால் நன்றாகவே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது, டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது. நல்ல பீல்டிங், நல்ல த்ரோ, கொஞ்சம் பவுலிங் என்று ஆல்ரவுண்டர்களாக இருக்கும் அணிதான் தேவை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உண்மையில் பார்மில் இல்லாத ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு டி20 உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்தால் நன்றாகவே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது, டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது. நல்ல பீல்டிங், நல்ல த்ரோ, கொஞ்சம் பவுலிங் என்று ஆல்ரவுண்டர்களாக இருக்கும் அணிதான் தேவை.

கடைசி வரை நின்று ஆட தேவையில்லை சஞ்சு சாம்சன் கூறுவது போல் சிறு சிறு அதிரடிகளை ஆடி செட் செய்து கொடுத்தால் போதும், அந்த விதத்தில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், விருத்திமான் சஹா, போன்ற வீரர்களே போதும். ரிஷப் பண்ட் போன்ற ஒற்றைப் பரிமாண வீரர் கூட டி20-க்குத் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்திருக்கும் உத்தேச அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை சேர்க்கவில்லை.

கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளார். வலுவான தொடக்க வீரர்கள் வரிசையில் இஷான் கிஷன் மற்றும் ராகுலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள அவர், மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி மற்றும் சுர்யகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.

விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், பினிஷர் ரோலில் தீபக் ஹூடா மற்றும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் ஸ்பின்னர்களாக செஹல், குல்தீப் யாதவ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உலகக்கோப்பை டி20 இந்திய அணி இதோ:

கேஎல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், குருனால் பாண்டியா, யஜுவேந்திர செஹல், முகமது ஷமி, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா .

First published:

Tags: Rohit sharma, T20 World Cup, Virat Kohli