• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் 4 முக்கிய மாற்றங்கள் - 2 மாஜி கேப்டன்கள் அணியில் சேர்ப்பு!

டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் 4 முக்கிய மாற்றங்கள் - 2 மாஜி கேப்டன்கள் அணியில் சேர்ப்பு!

Pakistan

Pakistan

ஏற்கனவே அணியில் இடம்பிடித்திருக்கும் சோகைப் மக்சூத்திற்கு பதிலாக மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்.

  • Share this:
டி20 உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியில் மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிதாக மூவர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மாற்றம் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்குமா?

அக்டோபர் 17ம் தேதி, அதாவது இன்னும் ஒரு வாரத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரின் முக்கிய அம்சமாக இருக்கப்போவது இந்தியா - பாகிஸ்தான் மோதல் தான். கேப்டன் பாபர் அசாம் தலைமையில் 15 பேர் கொண்ட டீமை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அணி வீரர்களும் துபாய்க்கு சென்று கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயோ பபுளில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து மூன்று வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது உட்பட மூன்று வீரர்களை அவர்களுக்கு மாற்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் ஏற்கனவே 15 பேர் அடங்கிய அணியை அறிவித்துள்ளன. இந்த அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்வதாக இருந்தால் அக்டோபர் 10ம் தேதிக்குள் (இன்று) மாற்றம் செய்துகொள்ள நேரம் வழங்கப்பட்டிருந்தது.

Also Read:  ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் – சென்னை நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவரான முகமது வாசிம் இன்று பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, ஹைதர் அலி மற்றும் ஃபக்கார் ஸமான் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.



ஏற்கனவே அணியில் இடம்பிடித்திருந்த குஷ்தில் கான், துணை கீப்பர் ஆசாம் கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

Also Read:  லக்கிம்பூர்கேரி சம்பவத்தில் மத்திய அமைச்சர் மகன் கைது ஏன்?.. காட்டிக்கொடுத்த டவர் லொகேஷன்? புதிய தகவல்கள்!

அணி மாற்றம் குறித்து, அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் முகமது வசிம் கூறுகையில், நடைபெற்று வரக்கூடிய தேசிய டி20 தொடரில் இந்த மூன்று வீரர்களின் செயல்பாடு மற்றும் அணி நிர்வாகத்தினை ஆலோசனையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், மூவரும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு பலமாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி இடம்பிடித்திருந்த நிலையில் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயோ பபுளில் இருந்து வெளியேறியதால் ஹைதர் அலி நீக்கப்படிருந்தார். தற்போது அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

Also Read:  பிரபல REC சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் – ரூ.5000 கோடி முதலீடு

இவர்கள் தவிர்த்து ஏற்கனவே அணியில் இடம்பிடித்திருக்கும் சோகைப் மக்சூத்திற்கு பதிலாக மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார். சோகைப் மக்சூத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 6வது முறையாக சோயப் மாலிக் உலகக் கோப்பை தொடரில் ஆட இருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: