ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா..!

ICC Women's WorldCup 2020

ICC Women's T20 WorldCup 2020 | இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

 • Share this:
  ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று லீக் போட்டிகள் நடைபெற்றன.

  இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

  இந்திய அணியைத் தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

  இதையடுத்து வரும் 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
  Published by:Vijay R
  First published: