• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஜாக்பாட் - ரமீஸ் ராஜா வெளியிட்ட ரகசியம்

இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஜாக்பாட் - ரமீஸ் ராஜா வெளியிட்ட ரகசியம்

india vs pakistan

india vs pakistan

இந்தியா மட்டும் ஐசிசிக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்திவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிதைந்துவிடும்

  • Share this:
உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் மட்டும் வீழ்த்திவிட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தொகை நிரப்பப்படாத காசோலை தயாராக இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்திருக்கிறார்.

ஐபில் கிரிக்கெட் தொடர் நிறைவு பெறவிருக்கும் நிலையில் அடுத்த சரவெடிக்காக காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள், அது தான் உலகக் கோப்பை டி20 தொடர். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த இந்த தொடர், கொரோனா காரணமாக தற்போது துபாய் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 17ம் தேதி தகுதிச் சுற்று போட்டிகளும், அக்டோபர் 23ம் தேதி

இத்தொடரில் ஆரம்பமே ஆரவாரமாக இருக்கப் போகிறது. இத்தொடரில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஆவலுடன் எதிர்பார்துக் காத்துக்கிடக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல், வரும் அக்டோபர் 24ம் தேதியன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேற இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஒரே குரூப்பில் இடம்பிடித்துள்ளன. இலங்கை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆட வேண்டியிருக்கிறது.

india vs pakistan


இதனிடையே இந்தியாவுடனான போட்டி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசப்பட்டிருப்பதாக கிரிக்கெட் பாகிஸ்தான் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் பாக் வீரருமான ரமீஸ் ராஜா அக்கூட்டத்தில் பேசுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது 90% அளவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அளிக்கும் நிதியுதவியில் தான் இயங்கி வருகிறது. அதே போல ஐசிசிக்கு 90% நிதியுதவி அளிப்பதே இந்திய கிரிக்கெட் வாரியம் தான்.

Also read: ரூ.16 கோடிக்கு அந்த வீரரை வாங்கியும் வேஸ்ட் தான் – கவாஸ்கர் ஏமாற்றம்

இந்தியா மட்டும் ஐசிசிக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்திவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிதைந்துவிடும் என நான் அச்சப்படுகிறேன். ஏன் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு எந்த நிதியும் கொடுப்பதில்லை.

Ramiz raza


நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வலிமையானதாக்க உறுதியுடன் இருக்கிறேன். ஒரு முதலீட்டாளர் என்னிடம், எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடர் மோதலில், பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியாவை வீழ்த்திவிட்டால் தொகை நிரப்பப்படாத காசோலை (Blank cheque) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

Also read:  ‘நான்சென்ஸ்’ – இந்திய அணியை புகழ்ந்து அப்துல் ரசாக்கை கலாய்த்த தானிஷ் கனேரியா!

கடந்த மாதம் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுடனான போட்டிகளை ரத்து செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியில் பலமாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. சிறந்த கிரிக்கெட் அணியும், சிறந்த கிரிக்கெட் பொருளாதாரமும் இரண்டு மிகப்பெரிய சவால்கள்” இவ்வாறு ரமீஸ் ராஜா அக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2014ம் ஆண்டு ரன்னர் அப் ஆக வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: