• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணி அறிவிப்பு- இளம் வீரருக்காக தியாகம் செய்த முக்கிய வீரர்

டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணி அறிவிப்பு- இளம் வீரருக்காக தியாகம் செய்த முக்கிய வீரர்

பங்களாதேஷ் அணி டி20 உலகக்கோப்பை: அறிவிப்பு

பங்களாதேஷ் அணி டி20 உலகக்கோப்பை: அறிவிப்பு

வரவிருக்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் மூத்த, அனுபவமிக்க முக்கியமான வீரர் தேர்வு செய்யப்படவில்லை, அவராகவே விலகியதில் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

  • Share this:
    குழிப்பிட்சைப் போட்டு நியூசிலாந்தை குழிக்குள் தள்ளி தொடரை வென்ற வங்கதேசம் உலகக்கோப்பை டி20 அணியை அறிவித்தது. சமீபத்தில் ஜிம்பாப்வேயை 2-1 என்றும் ஆஸ்திரேலியாவை 4-1 என்றும் இதே வங்கதேசம் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது, தேங்க்ஸ் குழிப் பிட்ச்! இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அணியில் தொடக்க விரர் தமீம் இக்பால் இல்லை, அவரே விலகி விட்டார், இளைஞர்களின் இடத்தை தான் ஆக்ரமிக்க விரும்பவில்லை என்று அவர் தன் இடத்தை தியாகம் செய்துள்ளார்.

    2016 டி20 உலகக்கோப்பையில் தமீம் இக்பால் அதிகபட்சமாக 295 ரன்களை 73.75 என்ற சராசரியில் எடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹுசைன் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் அமினுல் இஸ்லாம் பிப்லாப் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நுருல் ஹசன் விக்கெட் கீப்பராக செயல்படுவார். டி20-யில் இனி விக்கெட் கீப்பிங் செய்ய விருப்பமில்லை என்று முஷ்பிகுர் ரகீம் தெரிவித்துள்ளார்.

    அணியில் 8 பேட்ஸ்மென்கள், 2 ஆல்ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரேயொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் உள்ளனர். பங்களாதேஷ் அணி குரூப் பி-யில் ஓமன், பபுவா நியுகினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்த குரூப்பில் டாப் 2 இடங்களில் பினிஷ் ஆனால் வங்கதேசம் 12 அணிகள் கொண்ட பிரதான சுற்றில் ஆடும். அக்டோபர் 17ம் தேதி ஸ்காட்லாந்தை சந்திக்கின்றனர். இதுதான் உலகக்கோப்பையின் தொடக்கப் போட்டி.

    வங்கதேச அணி வருமாறு:

    மகமுதுல்லா (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகீம், சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஆபிப் ஹொசைன், மொகமது நயீம், நுருல் ஹசன், ஷமீன் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது, முகமது சயிஃபுதீன், ஷோரிஃபுல் இஸ்லாம், மெகதி ஹசன், நசும் அகமது

    ரிசர்வ் வீரர்கள்: அமினுல் இஸ்லாம் பிப்லாப், ரூபல் ஹுசைன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: