• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இருக்க மாட்டார்?

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இருக்க மாட்டார்?

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

ஓமானில் நடைபெறும் குவாலிஃபையருடன் தொடங்கியுள்ள 2021-ம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை இப்போது பிரதான அணிகளின் வார்ம்-அப் போட்டிகளுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இதில் முதல் குண்டைத் தூக்கிப்போட்ட ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய பிளேயிங்ல் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லை என்கிறார்.

  • Share this:
    ஓமானில் நடைபெறும் குவாலிஃபையருடன் தொடங்கியுள்ள 2021-ம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை இப்போது பிரதான அணிகளின் வார்ம்-அப் போட்டிகளுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இதில் முதல் குண்டைத் தூக்கிப்போட்ட ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய பிளேயிங்ல் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லை என்கிறார்.

    அக்டோபர் 23ம் தேதி ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை தொடக்க ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இதற்கான தன் லெவனை ஷேன் வார்ன் தேர்வு செய்யும்போது ஸ்டீவ் ஸ்மித்தை தன் அணியிலிருந்து விலக்கி வைத்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஷேன் வார்ன் லெவன் வருமாறு:

    ஏரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிறிஸ்டியன் அல்லது ஆகர் (பிட்சைப் பொறுத்து), கமின்ஸ், ஸ்டார்க், சாம்ப்பா, எலிஸ்/ரிச்சர்ட்சன்/ஹேசில்வுட் (பிட்ச்சைப் பொறுத்து இவர்களில் ஒருவர்)

    டக் புகழ் வார்னரை அணியில் தேர்வு செய்து விட்டு ஓரளவுக்கு ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித்தை அணியிலிருந்து விலக்கி வைக்கும் ஷேன் வார்னை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ஸ்டாய்னிஸ் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் ஆடவில்லை, ஆனால் அவரை 3ம் நிலைக்கும் அதிரடி பார்மில் இருக்கும் கிளென் மேக்ஸ்வெலை 4ம் நிலைக்கும் சேர்த்துள்ளார் ஷேன் வார்ன். அதே போல் பவுலர்களில் கேன் ரிச்சர்ட்சன் பயிற்சி ஆட்டத்தில் அசத்தலாக வீசினார். அதனால் அவரா ஹேசில்வுட்டா என்பதில் கடும் போட்டி நிலவும்.

    ஏனெனில் ஹேசில்வுட் சிஎஸ்கே சாம்பியன் அணிக்காக அசத்தலாக வீசியவர். தேவைப்படும் போது டைட்டாகவும் தேவைப்படும் போது விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்துள்ளார ஹேசில்வுட். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் இருப்பதே எதிரணியினருக்கு ஒரு அச்சுறுத்தல் அந்த அச்ச காரணியை எப்படி ஷேன் வார்ன் அணியில் சேர்க்காமல் இருக்க முடியும்? புதிரான செலக்‌ஷன் தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: