• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் 10 வீரர்கள் உறுதி... 5 இடத்திற்கு 16 மோதல்கள்

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் 10 வீரர்கள் உறுதி... 5 இடத்திற்கு 16 மோதல்கள்

இந்திய அணி

இந்திய அணி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 10 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற 5 வீரர்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடன் பிசிசிஐ உயர் அதிகாரிகள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் சந்திக்க உள்ளனர். 15 பேர் கொண்ட அணியை தவிர 3 ரிசர்வ் வீரர்களும் தேர்வு செய்யலாம். டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் 10 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 இடத்திற்கு 16 வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இந்திய அணி 2007-க்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை. விராட் கோலி கேப்டனாக இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை.

    கிரிக் இன்ஃபோ செய்திகளின்படி, விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் சாஹல் இந்திய அணியில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மற்ற 5 வீரர்கள் மற்றும் 3 ரிசர்வ் வீரர்கள் யார் என்பதில் தான் தற்போது மோதல் உள்ளது.

    ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா தவிர இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் கூடுதல் பேட்ஸ்மேன்கள் சேர்க்கப்படுவார்களா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. ஷிகார் தவான், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் பர்திவ் ஷா ஆகியோர் இந்த பந்தயத்தில் உள்ளனர். இது தவிர 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்படும். இவர்களில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், டி நடராஜன், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டருக்கான ரேஸிலும் போட்டி அதிகமாகவே உள்ளது. அக்ஷர் படேல், க்ருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். மறுபுறம் ரவிசந்திரன் அஸ்வின், ராகுல் சஹார் மற்றும் வருண் சக்கரவர்த்தி என சுழற்பந்தில் ஸ்பெஸலிஸ்ட் உள்ளனர். இவர்களில் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: