டி20 உலகக் கோப்பை : இந்திய அணி அறிவிப்பு... அஸ்வினுக்கு வாய்ப்பு, மற்ற வீரர்கள்?

டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் ஆலேசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பெற்றுள்ளார், தங்கராசு நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

  டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.  இந்திய அணி : விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

  மாற்று வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்

  மேலும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் ஆலேசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: