ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசி டி20 மகளிர் அணியில் இடம்பெற்ற 3 இந்திய வீராங்கனைகள்…

ஐசிசி டி20 மகளிர் அணியில் இடம்பெற்ற 3 இந்திய வீராங்கனைகள்…

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா கடந்த ஆண்டு 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 18.55, எகானமி ரேட்டை 6 ரன்கள் என இவர் குறைவாக வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2022-ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆண்கள் அணியிலும் இந்திய வீரர்கள் 3 பேர் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் ஐசிசி அமைப்பு டி20க்கான அணியை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்த அணியில் இடம்பெறுவார்கள். ஐசிசி அணியில் இடம்பெறுவது கிரிக்கெட் உலகில் கவுரவமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டி20 மகளிர் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க பேட்டிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா, விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதேபோன்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 594 ரன்களை குவித்திருக்கும் மந்தனாவின் சராசரி 33 ரன்னாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 133.48. கடந்த ஆண்டில் மட்டும் 5 அரைச் சதங்களை எடுத்துள்ளார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அவர் அடித்த அரைச் சதம் கவனம் பெற்றது.

ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா கடந்த ஆண்டு 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 18.55, எகானமி ரேட்டை 6 ரன்கள் என இவர் குறைவாக வைத்துள்ளார். மற்றொரு வீராங்கனையான கீப்பர் ரிச்சா கோஷின் ஸ்ட்ரைக் ரேட் 150-யை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு 259 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 13 சிக்சர்கள் அடங்கும். ஐசிசி டி20 மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் - ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), சோஃபி டெவின் (கேப்டன்) (நியூசிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா), நிடா தார் (பாகிஸ்தான்), தீப்தி சர்மா (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) மற்றும் இனோகா ரணவீரா (இலங்கை).

First published:

Tags: Cricket