ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ICC T20 Ranking : முதலிடத்திற்கு முன்னேறும் சூர்யகுமார் யாதவ்... ரிஸ்வானை பின்னுக்கு தள்ள இத்தனை புள்ளிகள் தான் வித்தியாசம்

ICC T20 Ranking : முதலிடத்திற்கு முன்னேறும் சூர்யகுமார் யாதவ்... ரிஸ்வானை பின்னுக்கு தள்ள இத்தனை புள்ளிகள் தான் வித்தியாசம்

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

ICC T20 Ranking | ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக முன்னேறியுள்ளார். ரிஸ்வானை பின்னுக்கு தள்ள அவருக்கு சில புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவரின் 176 ஸ்ட்ரைக் ரேட் மற்ற அணிகளை பீதியடை வைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் 2 அரைசதம் விளாசினார். முதல் போட்டியில் 50 ரன்களும் 2-வது போட்டியில் 61 ரன்களும் அடித்து இருந்தார்.

  டி20 போட்டியில் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் ஐசிசி டி20 ரேங்கிலும் முன்னேறி கொண்டே வருகிறார். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தான். சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகள் உடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 854 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரிஸ்வானுக்கும் சூர்யகுமார் யாதவ்க்கும் 16 புள்ளிகள் மட்டுமே வித்தியசம் உள்ளது.

  Also Read : என் இடத்துக்கு வேட்டு வைச்சுருவார் போல... தினேஷ் கார்த்தி அதிரடியை வியந்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்

  டி20 உலகக்கோப்பை இந்த இரு வீரர்களில் யார் தங்களது அதிரடியை தொடர்கிறார்களோ அவர்கள் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 801 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முறையே 14, 15, 16 இடங்களில் உள்ளனர்.

  டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Cricket, Suryakumar yadav, T20