சூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல கேப்டன் உட்பட 3 வீரர்கள் நீக்கம்... ஐசிசி அதிரடி

டி20 தகுதிச்சுற்று மற்றும் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற உள்ள டி10 தொடரில் பங்கேற்க உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல கேப்டன் உட்பட 3 வீரர்கள் நீக்கம்... ஐசிசி அதிரடி
ஐசிசி
  • Share this:
ஐசிசி விதிமுறைகளை மீறி சூதாட்ட புகாரில் சிக்கிய ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் உள்ளிட்ட 3 வீரர்களை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று நாளை தொடங்க உள்ளது. இந்த தகுதி சுற்று தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

டி20 தகுதிச்சுற்று மற்றும் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற உள்ள டி10 தொடரில் பங்கேற்க உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த அணியின் கேப்டன் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஐசிசி விதிமுறைகளை மீறி சூதாட்டாத்தில் ஈடுப்பட்ட புகாரில் சிக்கி உள்ளனர்.


ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கேப்டன் முகமது நவீத்

இதனையடுத்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கேப்டன் உட்பட 3 வீரர்களையும் ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. 32 வயதாகும் கேப்டன் நவீத் வேகப்பந்து வீச்சாளர். 39 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கேப்டன் நவீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அகமது ராசா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Watch

Loading...

First published: October 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...