சூப்பர் ஓவர் முறையில் மாற்றம்... அதிரடி காட்டிய ஐசிசி

சூப்பர் ஓவர் முறையில் மாற்றம்... அதிரடி காட்டிய ஐசிசி
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 15, 2019, 7:49 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி 'டை' ஆனால், முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி டை ஆனால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதுவரை சூப்பர் ஓவரின் முடிவிலும் 'டை' ஆனால் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு வந்தது.


இந்த விதிமுறையின்படி தான் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பையில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக, சூப்பர் ஓவர் முறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகள் 'டை'-யில் முடிந்தால், ஓர் அணியின் வெற்றியை உறுதி செய்யும் வரை மீண்டும் மீண்டும் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் கிரிக்கெட் வாரியங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஐ.சி.சி. விலக்கிக்கொண்டது.2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை 14 கோடி 20 லட்சத்தில் இருந்து 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் முதல் டி-20 உலகக் கோப்பை தொடர் 2021-ல் வங்கதேசத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கும் ஐசிசி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading