மைதானத்தில் மல்லுக்கட்டிய இந்திய - வங்க தேச வீரர்கள் மீது அதிரடி காட்டிய ஐசிசி...!

மைதானத்தில் மல்லுக்கட்டிய இந்திய - வங்க தேச வீரர்கள் மீது அதிரடி காட்டிய ஐசிசி...!
  • News18
  • Last Updated: February 11, 2020, 11:47 AM IST
  • Share this:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இந்திய - வங்க தேச வீரர்கள் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியா - வங்கதேச அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று, உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல்முறையிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.


இந்த போட்டியின் நாயகனாக வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலியும், தொடர் நாயகனாக இந்தியாவின் ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டனர்.

பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஓடி வந்து இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார்.எனினும் மோதல் கட்டுப்படவில்லை. வாக்குவாதம் அதிகமானதை அடுத்து அதிகாரிகள் பலரும் மைதானத்திற்குள் வந்து இரு அணி வீரர்களையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த மோதலால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பானது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்ததாகவும், அதனால், மோதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக ஐசிசி விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது இரு தரப்பில் இருந்தும் 5 வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி நடவடிக்கை காரணமாக வங்கதேசத்தின் தவுஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹாசன் ஆகியோர் தலா 6 டிமெரிட் புள்ளிகளை இழக்கின்றனர். இந்தியாவின் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் 5 டிமெரிட் புள்ளிகளை இழக்கின்றனர்.

First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்