உலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி!

ஓவர் த்ரோ சர்ச்சையில் நடுவர்களின் இந்த முடிவற்கு பலர் விமர்சனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

உலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி!
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: July 16, 2019, 6:16 PM IST
  • Share this:
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் உரசி சென்ற ஓவர் த்ரோவிற்கு நடுவர்கள் 6 ரன்கள் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஐசிசி அதற்கு விளக்கமளித்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கடைசி நொடி வரை தொடர்ந்தது.

போட்டி டிராவில் முடிவடைய வெற்றி யாருக்கு என நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைய பவுண்டரி எண்ணிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.


Also Read :சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

இந்த போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.

நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.நடுவர்களின் இந்த முடிவற்கு பலர் விமர்சனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு இதுவரை மௌனம் காத்துவந்த ஐசிசி தரப்பிலிருந்து தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள நடுவர்களே ஐசிசி விதிகளின்படி முடிவெடுப்பார்கள். நடுவர்களின் முடிவில் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க முடியாது“ என்றார்.

ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது நடுவர்களின் தெளிவான குழப்பம் என சர்வதேச முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கூறியிருந்தார். மேலும் ஐசிசி விதிப்படி 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

Also Read: ’ஆறு ரன்கள் கொடுத்தது தெளிவான தவறு’! ஐசிசி விதியை தெளிவாக எடுத்துரைத்த முன்னாள் நடுவர்

வெற்றிக்கொண்டாட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்...Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading