சச்சினை சீண்டிய ஐசிசி... கொந்தளிக்கும் ரசிகர்கள்

news18-tamil
Updated: August 28, 2019, 5:27 PM IST
சச்சினை சீண்டிய ஐசிசி... கொந்தளிக்கும் ரசிகர்கள்
சச்சின் - ஸ்டோக்ஸ்
news18-tamil
Updated: August 28, 2019, 5:27 PM IST
கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன் சச்சின் டெண்டுகல்கர் என்ற ட்விட்டர் பதிவை மீண்டும் ஐ.சி.சி முன்னெடுத்து ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

நடப்பாண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸிற்கு சச்சின் ஆட்டநாயகன் விருதை வழங்கி கௌரவப்படுத்தினார். இந்த புகைப்படத்தை ஐ.சி.சி தனது உலகக் கோப்பை 2019 ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் உடன் சச்சின் உள்ளார் என்று பதிவு செய்திருந்தது.


ஸ்டோக்ஸ் சிறந்த வீரர் தான், ஆனால் சச்சினை சிறுமைப்படுத்துவது போல் இந்த பதிவு இருந்ததால் ரசிகர்களின் ஒட்டுமொத்த விமர்சனத்தையும் பெற்றது. தற்போது நடைபெற்று வரும் ஆஸஷ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் தனி ஒருவராக சதம்விளாசி இங்கிலாந்தை அணியை வெற்றி பெற செய்தார்.பென் ஸ்டோக்ஸிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் முன்பே சொன்னோம் என்று மீண்டும் சச்சின் உடன் ஸ்டோக்ஸ் இருந்த புகைப்படத்துடன் கூடிய கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சச்சினின் பெருமை தெரியாமல் ஐசிசி உளறி வருவதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.Also Watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...