முகப்பு /செய்தி /விளையாட்டு / ICC Rankings-ஐசிசி டெஸ்ட் தரவரிசை - இந்திய வீரர்கள் பின்னடைவு- ஒரு நாள் போட்டியில் பாபர் அசாம் நம்பர் 1

ICC Rankings-ஐசிசி டெஸ்ட் தரவரிசை - இந்திய வீரர்கள் பின்னடைவு- ஒரு நாள் போட்டியில் பாபர் அசாம் நம்பர் 1

கோலி.

கோலி.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி பின்னடைவு கண்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்துவீச்சு தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி பின்னடைவு கண்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்துவீச்சு தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் 892 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சக வீரர் ஸ்டீவ் ஸ்மித் 845 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 10 இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் பும்ரா 830 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கமின்ஸ் பிரமாதமான பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு 901 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி 811 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோஹித் சர்மா 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்கிறார்.

ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். அவர் 679 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 733 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷகீப் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

First published:

Tags: ICC Ranking, ICC Test Ranking, Rohit sharma, Virat Kohli