சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டிருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
போட்டித்தொடர்களுக்கு தக்கபடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது அணிகள், வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா 2வது இடத்துக்கு சரிந்துள்ளது, அதே போல முதல் 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
சமீபத்தில் இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 1999ம் ஆண்டுக்கு பிறகு, 22 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து வெல்லும் 3வது தொடராகவும் அது அமைந்தது.
Also Read:
கணவரை கொலை செய்து மர்ம உறுப்பை எண்ணெய்யில் போட்டு பொறித்த கொடூர மனைவி!
அதே போல இங்கிலாந்து அணி 2014ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் தோல்வியாகவும் இது மாறியது, முன்னதாக 2014ம் ஆண்டு இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா (121) இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா (108) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நியூசிலாந்திடம் தொடரை இழந்த இங்கிலாந்து (107) 4வது இடத்தையும், பாகிஸ்தான் (94) 5 வது இடத்தையும், மேற்குஇந்திய தீவுகள் (84) 6வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா (80) 7வது இடத்தையும், இலங்கை (78) 8வது இடத்தையும், வங்கதேசம் (46) 9வது இடத்தையும், ஜிம்பாப்வே (35)10வது இடத்தையும் பிடித்துள்ளன.
Also Read:
மிரட்டும் கருப்பு பூஞ்சை: 3 வாரத்தில் மட்டும் 2,100 பேர் பலி.. 150% ஆக உயர்ந்த பாதிப்பு!
வரும் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் உலக தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது அந்த அணி வீரர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், இந்திய அணி 3வது இடத்திலும் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.