முகப்பு /செய்தி /விளையாட்டு / ஷாஹின் அஃப்ரீடியை பின்னுக்குத் தள்ளி பும்ரா நம்பர் 1- டி20யில் சூரியகுமார் பாய்ச்சல்

ஷாஹின் அஃப்ரீடியை பின்னுக்குத் தள்ளி பும்ரா நம்பர் 1- டி20யில் சூரியகுமார் பாய்ச்சல்

பூம் பூம் பும்ரா நம்பர் 1

பூம் பூம் பும்ரா நம்பர் 1

ஐசிசி தரவரிசை: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர் ஆனார், அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 117 ரன்கள் எடுத்து டி20 பேட்டர்களில் நம்பர் 5 இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐசிசி தரவரிசை: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர் ஆனார், அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 117 ரன்கள் எடுத்து டி20 பேட்டர்களில் நம்பர் 5 இடத்தைப் பிடித்தார்.

ஜஸ்பிரித் பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் இருந்து 2வது இடத்தையும், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பரபரப்பான 117 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், டி 20 ஐ பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார். தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது, ஆனால் குறுகிய வடிவங்களில் சிறப்பான பார்மில் உள்ளது. டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பும்ரா 718 புள்ளிகளுடன் ஒருநாள் பவுலிங்கில் முதலிடம் பிடித்தார். ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடம், இமாம் உல் ஹக் 2ம் இடம் விராட் கோலி 3ம் இடம், ரோஹித் சர்மா 4ம் இடம், குவிண்டன் டி காக் 5. டி20 பேட்டிங்கில் பாபர் அசாம் முதலிடம் ரிஸ்வான் 2, அய்டன் மார்க்ரம் 3, டேவிட் மலான் 4, சூரியகுமார் யாதவ் 5ம் இடம்.

டி20 பவுலிங்கில் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடம், ஆடில் ரஷித் 2, தப்ரைஸ் ஷம்சி 3, ரஷீத் கான் 4, ஆடம் ஜாம்ப்பா 5. புவனேஷ்வர் குமார்8.

First published:

Tags: ICC Ranking, Jasprit bumrah, ODI