ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணி, முதலிடத்தை தக்க வைத்திருந்த நிலையில், தற்போது 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை வகிக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. டி20 கிரிக்கெட் தொடரில் 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.