ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசி-யின் அதிகாரமிக்க பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம்

ஐசிசி-யின் அதிகாரமிக்க பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம்

ஜெய் ஷா

ஜெய் ஷா

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின்  அதிகாரமிக்க எஃப்&சிஏ( F&CA) தலைவராக ஜெய் ஷா தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முக்கிய பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். 

  ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜிம்பாப்வேயின் தாவெங்வா முகுஹ்லானி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே இரண்டாவது முறையாக ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது குறித்து பேசிய கிரெக் பார்க்லே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு கவுரவமானது, மேலும் எனது சக ஐசிசி இயக்குநர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.

  உலகில் அதிகமானோர் கிரிக்கெட்டை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறேன் என கிரெக் பார்க்லே கூறினார். போட்டியின்றி கிரெக் பார்க்லே தேர்ந்தெடுக்கப்பட்டதில் 17 பேர் கொண்ட குழுவில் பலம் வாய்ந்த பிசிசிஐயின் ஆதரவு அவருக்கு இருந்தது. ஆக்லாந்தைச் சேர்ந்த வர்த்தக வழக்கறிஞரான பார்க்லே முதலில் 2020ஆம் ஆண்டு நவம்பர் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் முன்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராகவும் 2015 இல் ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  இந்த நிலையில் தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐசிசி-யின் முக்கிய பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். . ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின்  அதிகாரமிக்க எஃப்&சிஏ( F&CA) தலைவராக ஜெய் ஷா தேர்வாகியுள்ளார். எஃப்&சிஏ தலைவராக இருப்பவர் உறுப்பு நாடுகளின் வருவாய் பகிர்வு மற்றும் முக்கிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்வதில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ள பதவியாகும்.

  இதையும் படிங்க: தோனியால் முடிந்தது ஏன் மற்ற கேப்டன்களால் முடியவில்லை ? வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறதா பிசிசிஐ?

  கிரிக்கெட்டின் உலகளாவிய வணிக மையமாக இந்தியா உள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்பான்சர்ஷிப் பிசிசிஐ மூலமாக வருகிறது என்பதால் ஐசிசி எஃப்&சிஏ எப்போதும் பிசிசிஐ தலைமையில் இருக்க வேண்டியது அவசியம் கூறப்படுகிறது.

  தற்போது சென்னை அணியின் உரிமையாளர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் காலத்தில் எஃப்&சிஏ தலைவர் பதவியில் இந்தியர்களே இருந்தனர். இதற்கு பின்னர் ஐசிசி தலைவராக ஷஷாங்க் மனோகர் இருந்த காலத்தில் பிசிசிஐயின் அதிகாரம் கணிசமாகக் குறைந்திருந்ததாக கூறப்படுகிறது. பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு வரை எஃப்&சிஏ குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Amit Shah, BCCI, ICC