நவம்பர் மாதத்திற்கான ஐசிசி வழங்கும் சிறந்த வீரருக்கான விருதைப் பெறுவதற்கு ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த கிரிக்கெட் வீரர்களை கௌரவப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதம் தோறும் சிறந்த வீரருக்கான விருதை அறிவித்து வருகிறது. அந்தந்த மாதங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இந்த விருதை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாஸ் பட்லர் இந்த விருதைப் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு பட்லர் முக்கிய காரணமாக இருந்தார். நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ரன்கள் அதிரடியாக இவர் குவித்தார்.
WATCH – FIFA WORLD CUP : ஜப்பான் – குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
அரையிறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளை சந்தித்து பட்லர் 80 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Have you checked the nominations for the ICC Men’s Player of the Month for November 2022 yet?
Vote now 🗳️ https://t.co/hywYRi60hf pic.twitter.com/EWJza6ioIc
— ICC (@ICC) December 6, 2022
இவரைத் தவிர்த்து இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசியதற்காக அடில் ரஷீது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அடில் ரஷீதை பொருத்தளவில் மிகக்குறைவான விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், மிகக்குறைந்த ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்து எதிரணி வீரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார். அந்தவகையில் நவம்பர் மாதத்தில் கவனிக்கப்பட்ட பந்துவீச்சாளராக இவர் இருந்து வந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கனிட்கர் நியமனம்…
இதேபோன்று பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிதி பெயரும், நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷாஹின் அஃப்ரிதியின் பந்துவீச்சு பாராட்டும் வகையில் அமைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket