கால்பந்துக்கு அடுத்ததாக பெரிய தொடராகும் டி20 உலகக்கோப்பை- ஐசிசி புதிய முடிவு

தோனி 2007 டி20 உலகக்கோப்பையுடன் நிற்கும் காட்சி.

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையையும் உலக அளவில் கொண்டு செல்வதற்காக ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.

 • Share this:
  உலக அளவில் கால்பந்து உலகக்கோப்பையில்தான் அதிக அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் தற்போது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையையும் உலக அளவில் கொண்டு செல்வதற்காக ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.

  பரபரப்பான உலகில் 3 மணி நேரத்தில் முடியும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத பொழுதுபோக்கு கிரிக்கெட் வடிவமான டி20 அதிக பார்வையாளர்களை உலகம் முழுதும் ஈர்க்கின்றது.

  ஆனால் 2021-ம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 அணிகள்தான் பங்கேற்கின்றன. 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

  மகளிர் கிரிக்கெட்டில் அணிகளைக் கூட்டுவதற்கு ஏற்கெனவே ஐசிசி அனுமதியளித்துள்ளது.

  இது வெற்றியடைந்தால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் கூடுதல் அணிகளை இறக்க ஐசிசி முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஐசிசி முடிவுகளில் ஏற்கெனவே அதிகமிருந்த அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகளுக்கான உலகக்கோப்பையாகி விட்டது.

  10 அணிகள்தான் பங்கேற்கிறது என்றால் அது உலகக்கோப்பையல்ல, ஐசிசி கோப்பைதான்.

  2007-ம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் 16 அணிகள் ஆடின, இது 2011, 2015-ல் 14 அணிகளாகக் குறைக்கப்பட்டது. 2019-ல் 10 அணிகளாகக் குறைக்கப்பட்டது.

  ஒலிம்பிக்கில் கிரிக்கெட் குறித்து இந்தியா ஆர்வம் காட்டியது, ஆனால் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் குறுக்கீட்டை தாங்கள் விரும்பவில்லை என்று ஐசிசி செயற்குழு கூட்டத்தில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  ஐசிசி டி20 உலகக்கோப்பை சில சுவாரஸ்யங்கள்:

  2007-ல் இந்தியா சாம்பியன், பாகிஸ்தான் ரன்னர்.

  2 முறை சாம்பியன்களான அணி வெஸ்ட் இண்டீஸ். இலங்கை அணி

  3 இறுதிப்போட்டிகளில் பங்கேற்றுள்ளது. ஆச்சரியம் என்னவெனில் ஆஸ்திரேலியா இதுவரை ஒரு உலகக்கோப்பை டி20-யையும் வென்றதில்லை. 50 ஓவர் உலகக்கோப்பைகளில் 5-ல் வென்ற ஆஸ்திரேலியா இதில் வெல்லாதது ஆச்சரியமே.

  சாம்பியன்கள் பட்டியல்:

  2007- இந்தியா

  2009- பாகிஸ்தான்

  2010- இங்கிலாந்து

  2012- வெஸ்ட் இண்டீஸ்

  2014- இலங்கை; ரன்னர் இந்தியா

  2016-வெஸ்ட் இண்டீஸ்
  Published by:Muthukumar
  First published: