நியூசிலாந்து தொடரில் மோசமான பந்துவீச்சு... ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட பும்ரா...!

நியூசிலாந்து தொடரில் மோசமான பந்துவீச்சு... ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட பும்ரா...!
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பந்துவீச்சில் சொதப்பிய பும்ரா ஐசிசி தரவிரிசையில் தனது முதலிடத்தை இழந்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

ஒரு நாள் தொடரில் நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பும்ரா பந்து வீசிய தொடர்களில் நியூசிலாந்து தொடர் அவருக்கு மிகவும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பும்ரா 719 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஐசிசியின் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி 869 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து தொடரில் கோலி மொத்தம் 75 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். முதல் போட்டியில் மட்டுமே கோலி அரைசதம் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்