ICC Men's T20I Player Rankings- ஐசிசி டி20 தரவரிசை- காணாமல் போன இந்திய அணி சூப்பர் ஸ்டார்கள்
ICC Men's T20I Player Rankings- ஐசிசி டி20 தரவரிசை- காணாமல் போன இந்திய அணி சூப்பர் ஸ்டார்கள்
ஐசிசி டி20 தரவரிசையிலிருந்து காணாமல் போன நம் சூப்பர் ஸ்டார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் எல்லா பிரிவுகளையும் சேர்த்து ஒரே ஒரு பிரிவில் மட்டும் டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய வீரர்தான் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் எல்லா பிரிவுகளையும் சேர்த்து ஒரே ஒரு பிரிவில் மட்டும் டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய வீரர்தான் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, அதிலிருந்து வீரர்கள் படை வருவதாக, நமக்குக் கூறப்படுகிறது, இந்தியாதான் ஒவ்வொரு டி20 உலகக்கோப்பையையும் வெல்லும் என்று ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும் சொல்லப்படுகிறது, இவையெல்லாம் எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறதோ, அந்த அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யுமாறு ஐசிசி டி20 தரவரிசையில் ஒரேயொரு இந்திய வீரர் தவிர மற்றவர்களுக்கு இடமில்லை, எங்கே நம் சூப்பர் ஸ்டார்கள்?
பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மட்டும் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் இடம்பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மமுதல் இடத்தில் உள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணியின் சம்சி முதல் இடத்திலும் இங்கிலாந்து நாட்டின் அடில் ரஷீத் 2-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மது நபி முதல் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் டாப் 10-ல் அய்டன் மார்க்ரம், முகமது ரிஸ்வான், டேவிட் மலான், டெவன் கான்வே, ஏரோன் பிஞ்ச், ரசி வான் டெர் டசன், மார்டின் கப்தில், பதும் நிசாங்கா, லோகேஷ் ராகுல்.
10ம் இடத்தில் லோகேஷ் ராகுல், எங்கேப்பா நம் சூப்பர் ஸ்டார்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி. பவுலிங் சூப்பர் ஸ்டார் பும்ரா எங்கே? ஆல்ரவுண்டர்களில் ஆப்கான் வீரர் முகமட் நபி, ஷாகிப் அல் ஹசன், மொயின் அலி, ஜே.ஜே. ஸ்மிட், லியாம் லிவிங்ஸ்டன் டாப் 5-ல் உள்ளனர், டாப் 10-ல் கூட இந்திய வீரர் ஒருவரும் இல்லை.
ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ்: ‘எங்கப்பா நம் சூப்பர் ஸ்டார்கள்?’ பதில்: அட! அவங்க ஐபிஎல் -ல சம்பாதிச்சிட்டிருக்காங்கப்பா!!
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.