ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னது சூசின் டெண்டுல்கரா..? டிரம்பின் உரையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வரிசையில் இணைந்த ஐசிசி

என்னது சூசின் டெண்டுல்கரா..? டிரம்பின் உரையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வரிசையில் இணைந்த ஐசிசி

டொனல்டு ட்ரம்ப் - சச்சின் டெண்டுல்கர்

டொனல்டு ட்ரம்ப் - சச்சின் டெண்டுல்கர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரை தவறாக உச்சரித்த அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் நேற்று இந்தியா வந்தார். அதன்பின் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அந்த உரையின் போது 'எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்“ என்று பிரதமரை வாழ்த்தி பேசினார். அப்போது கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை இந்தியர்கள் தான் என்று பெருமைப்படுத்தினார். ஆனால் சச்சின் பெயரை உச்சரிக்கும் போது சூசின் டெண்டுல்கர் என்று கூறினார்.

உலகின் பலராலும் சச்சின் பெயரை எளிதாக உச்சரிக்கும் போது அமெரிக்க அதிபர் அவரது பெயரை சூசின் என்று உச்சரித்ததை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். ஐசிசி-யும் தனது ட்விட்டர் அமெரிக்க அதிபரின் உச்சரித்த சூசின் டெண்டுல்கரை கூகுளில் தேடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சச்சின் ரசிகர்கள் பலரும் ட்ரெம்பின் உச்சரிப்பை கேலி செய்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

When you dont know about cricket players and game but still need to pretend forcefully pronunciation 😂😂😂😂

Also see:

First published:

Tags: Sachin tendulkar, Trump India Visit