பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று சாதனையை தக்கவைத்தது இந்தியா!

ICC World Cup 2019 | India vs Pakistan | Team India | பாகிஸ்தான் அணி வெற்றி பெற 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டுமென டக்வத் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

Vijay R | news18
Updated: June 17, 2019, 12:39 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று சாதனையை தக்கவைத்தது இந்தியா!
India vs Pakistan
Vijay R | news18
Updated: June 17, 2019, 12:39 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக்வத் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியை காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்ட்ன சர்பராஸ் அஹமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கோப்பை தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தை தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.

கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா


இந்திய அணி 136 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் சிறுதுநேரம் ஆட்டம் தடைப்பட்டது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

இதன்பின் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜமான், இமாம் களமிறங்கினார். இமாம் 7 ரன்கள் எடுத்திருந்த போது விஜய் சங்கர் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த அஷாம் சற்று தாக்குப்பிடித்து ஆடினாலும் 48 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.பாகிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டுமென டக்வத் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத வரலாற்று சாதனையை இந்தியா தன்வசமே தக்கவைத்து கொண்டது.
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...