ஆர்.சி.பி ரசிகர்களைப் போல கணக்கு போடும் இலங்கை ரசிகர்கள்... இந்திய வெற்றிக்காக வேண்டும் பாக். ரசிகர்கள்!

வர இருக்கும் போட்டிகளின் முடிவுகளே 4 அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க உள்ளது.

news18
Updated: June 29, 2019, 3:44 PM IST
ஆர்.சி.பி ரசிகர்களைப் போல கணக்கு போடும் இலங்கை ரசிகர்கள்... இந்திய வெற்றிக்காக வேண்டும் பாக். ரசிகர்கள்!
ICC World Cup 2019
news18
Updated: June 29, 2019, 3:44 PM IST
உலகக்கோப்பை தொடரில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் 35 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகள் டாப் இடத்தில் உள்ளது.

மேற்கண்ட மூன்று அணிகளும் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது. நான்காவதாக உள்ளே செல்வதற்கு இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


வர இருக்கும் போட்டிகளின் வெற்றி தோல்விகளின் பொறுத்தே மேற்கண்ட நான்கு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. வங்கதேச அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனினும், நிகர ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசத்தை விட பாகிஸ்தான் பின் தங்கியுள்ளது.

Loading...
இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் நடையைக் கட்டுகிறது.

முன்னர் கூறியதுபோல, வர இருக்கும் போட்டிகளின் முடிவுகளே இந்த 4 அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க உள்ளது.

தென்னாப்பிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் வென்றிருந்தால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாக இருந்திருக்கும்.

ஆனால், தற்போது தோல்வியை தழுவியுள்ளதால், அரையிறுதி வாய்ப்பு மங்கலாகவே உள்ளது.

இலங்கை அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், கீழே உள்ள படத்தில் உள்ளபடி போட்டி முடிவுகள் வர வேண்டும். அப்படி வந்தால் படத்தில் உள்ள புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இலங்கை அணி ரசிகர்களின் கணக்கு (Photo Credit: Ada Derana)


இலங்கை ரசிகர்கள் இப்படி கணக்கு போட்டுக்கொண்டிருக்க, பாகிஸ்தான் ரசிகர்கள் திடீர் இந்திய அணி ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.

இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக இந்திய அணி வென்றால், பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இதனால், இந்திய அணி வெற்றிக்கு இந்திய ரசிகர்களை விட, பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம் வேண்டுகின்றனர்.

இதேபோல, வங்கதேசம் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு கணக்கு ஒன்றைப் போட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...