கோலாகலமாக தொடங்கியது உலகக் கோப்பை திருவிழா: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

இந்திய கேப்டன் விராட் கோலி, உலகக் கோப்பையை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோலாகலமாக தொடங்கியது உலகக் கோப்பை திருவிழா: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
ICC Cricket World Cup 2019
  • News18
  • Last Updated: May 30, 2019, 3:59 PM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியை 4 ஆயிரம் பேர் நேரடியாக மைதானத்தில் கண்டு களித்தனர்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா-2019, லண்டன் நகரில் இன்று களைகட்டியது. முன்னதாக, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே உள்ள பகுதியில் நேற்று மாலை தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறியது.
நிகழ்ச்சியை இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிளிண்டாஃப் தொகுத்து வழங்கினார். முதலில், விழா மேடைக்கு சாம்பியன் கோப்பை கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.பின்னர், 10 அணிகளின் கேப்டன்களும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அத்துடன், தத்தமது தேசிய கொடியை ஏந்திவந்த சிறுவர், சிறுமிகளுடன் அரங்கில் அவர்கள் தோன்றினர்.இந்திய கேப்டன் விராட் கோலி பேசும் போது, உலகக் கோப்பையை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

'Feel The Love' என்ற பாடலை John Newman மற்றும் Rudimental குழுவினர் பாடி இசை விருந்து படைத்தனர்.நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற '60 வினாடி சேலஞ்ச் கிரிக்கெட்' போட்டியும் நடத்தப்பட்டது. இதை ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தொடக்க நிகழ்ச்சியின் இறுதியாக, உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வமான 'ஸ்டேன்ட் பை' பாடலை, லாரின் மற்றும் ரூடிமென்டல் (Rudimental) பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.நிகழ்ச்சி துவங்கும் முன்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விருந்தில், 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

Also Watch

First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading