Home /News /sports /

மீண்டெழுந்த பாகிஸ்தான்.... லீக் சுற்றுடன் நடையைக் கட்டும் தென்னாப்பிரிக்கா...!

மீண்டெழுந்த பாகிஸ்தான்.... லீக் சுற்றுடன் நடையைக் கட்டும் தென்னாப்பிரிக்கா...!

பாக் கிரிக்கெட் அணி

பாக் கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய பஹர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் தலா 44 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களில் பாபர் ஆசம் தனது பங்கிற்கு 69 ரன்கள் சேர்த்து அணியின் ரன் விகிதத்தை சீராக உயர்த்தினார். மேலும், கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஸ் சோஹைல், 59 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.



முடிவில், பாகிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்க தரப்பில், நிகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 309 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்ரிக்கா அணி விளையாடியது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். டி-காக், டு பிளெசிஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் வாஹப் ரியாஸ், சதப் கான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



அந்த அணியின் ஹரிஸ் சோஹைல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி லீக் சுற்றோடு வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

Also See...

தோனி -கேதர் ஜாதவ் திணறல் பேட்டிங்! அதிருப்தி தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

'வாழ்க்கை ஒரு வட்டம்' - விஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி!

 




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Published by:Sankar
First published:

Tags: ICC Cricket World Cup 2019

அடுத்த செய்தி